செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran

ராஜமௌலியால் சிரஞ்சீவி படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்!

ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் ஆச்சார்யா திரைப்பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சிரஞ்சீவி நடித்த ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தை அடுத்து அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ’ஆச்சார்யா’. பிரபல இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார். சிரஞ்சீவியின் 65 ஆவது பிறந்தநாள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆச்சார்யா படத்தின் மோஷன் போஸ்டரைப் படக்குழு வெளியிட வைரல் ஹிட்டாகியது. 

அதையடுத்து கொரோனா காரணமாக இடைவெளி விட்டு விட்டு நடந்த படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் மே 13 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்ப்போது கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஜனவரியில் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியாவதால் அதையொட்டி பல படங்களும் தங்கள் ரிலிஸை மாற்றி அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆச்சார்யா படத்தை டிசம்பர் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்து தேவையில்லாத க்ளாஷை தவிர்த்துள்ளனர்.