செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Updated : வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (19:10 IST)

இயக்குநர் ஆசையை மூட்டை கட்டிவைத்துவிட்டு, முழுநேர நடிகரான இயக்குநர்

இயக்குநராக வெற்றிப் படங்களைக் கொடுத்தவர், இயக்குநர் ஆசையை மூட்டை கட்டிவைத்துவிட்டு முழுநேரமாக நடிப்பில் இறங்கிவிட்டார்.


 
இரண்டெழுத்து இனிஷியலைக் கொண்ட ஒளி இயக்குநர் இவர். முதல் படத்திலேயே தல நடிகரை இயக்கி ஹிட் கொடுத்தவர், அடுத்த படத்தில் தளபதியை இயக்கியும் ஹிட் கொடுத்தார். ஆனால், அவர் நடிக்க வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்தாராம். அவருடைய தோற்றத்தால் நடிப்பதற்கு வாய்ப்பு மறுக்கப்பட, இயக்குநராகி விட்டார். எனவே, அவர் இயக்கிய படங்கள் மட்டுமின்றி, பல படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார். அதுமட்டுமல்ல, பின்னாட்களில் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்தார். ஆனால், அவரை நடிகராக இந்த உலகம் ஏற்றுக் கொள்ளவேயில்லை.

கடந்த வருடம் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படத்தில், முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் இவர். படம் கலவையான விமர்சனங்களுக்கு ஆட்பட்டாலும், இவருடைய நடிப்பு பேசப்பட்டது. எனவே, தளபதி மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் என ஒரே நேரத்தில் இருவருக்கும் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமல்ல, சில படங்களில் ஹீரோவாகவும் கமிட்டாகியுள்ளார். எனவே, இயக்குநர் பதவியை மூட்டை கட்டிவைத்துவிட்டு, முழுநேர நடிகராகிவிட்டார். தேவைப்படும்போது அந்த மூட்டையை அவிழ்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறாராம்.