புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (17:11 IST)

'மெர்சல்' பெயரை பயன்படுத்த நீதிமன்றம் தடை - படக்குழுவினர் அதிர்ச்சி

மெர்சல் என்ற பெயரை பயன்படுத்தி விளம்பரப்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இப்படம் வருகிற தீபாவளியன்று வெளியாகவுள்ளது. 
 
இந்நிலையில், தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு வழக்கை தொடர்ந்தார். 2014ம் ஆண்டு ‘ மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பை பதிவு செய்திருந்தேன். ஆனால், மெர்சல் என விஜய் படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். எனவே, அந்த தலைப்பில் விளம்பரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
 
அவரின் மனுவை விசாரித்த நீதிபதி ‘மெர்சல்’ என்ற தலைப்பை வருகிற அக்டோபர் 3ம் தேதி வரை விளம்பரத்திற்காக பயன்படுத்தக்கூடாது என தடை விதித்தார். மேலும், தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
 
இப்படத்தின் டீசர் வீடியோ நேற்றுதான் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மெர்சல் படக்குழுவினர் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.