1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 14 ஆகஸ்ட் 2021 (09:21 IST)

கேரளாவில் படுக்கைகளுக்கு கடும் தட்டுப்பாடு

கேரளாவில் படுக்கைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு 70 சதவீதம் பேருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் கடந்த மாதத்தில் உச்சத்தை அடைந்த நிலையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கோரொனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது.  
 
இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் நாட்டின் தினசரி பாதிப்பில் 50% பதிவாகி இருப்பதால், அம்மாநிலத்தில் கொரோனா 3வது அலை தொடங்கி விட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கேரளாவில் கொரோனா பரவலின் தீவிரம் இன்னும் குறையவில்லை. தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் சராசரியாக 20 ஆயிரத்தை தாண்டுகிறது. 
 
இதனிடையே கேரளாவில் கொரோனா பரவல் இன்னும் குறையாத நிலையில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதனோடு தற்போது ஐசியு வசதி கொண்ட படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அடைந்த்வர்களில் 70 சதவீதம் பேர் வீடுகளுக்குள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.