1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 செப்டம்பர் 2021 (12:10 IST)

தகதகன்னு மின்னலாம்.. இது தல பொங்கல்! – வலிமை ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் தீவிரமாக எதிர்பார்த்த நிலையில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் நடித்து எச்.வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் வலிமை. போனி கபூர் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கி வருடங்கள் ஆகியும் படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்து வந்ததால் ரசிகர்கள் பலர் அப்டேட் கேட்டு அதை வைரலாக்கி வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் முதல் சிங்கிள் பாடலும் வெளியாகி பெரும் வைரலானது. இந்நிலையில் தற்போது வலிமை திரைப்படம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் போனிக்கபூர் வலிமை திரைப்படம் 2022ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்துள்ளார். வலிமை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.