புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 22 மே 2020 (12:32 IST)

போனிகபூர் வீட்டில் மேலும் இருவருக்கு கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சி தகவல்

அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தை தயாரித்து வரும் போனிகபூர் வீட்டில் பணி செய்து கொண்டிருந்த 23 வயது இளைஞர் ஒருவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை கொரோன வைரஸ் பாசிட்டிவ் என தகவல் வெளிவந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனை அடுத்து போனிகபூர் மற்றும் அவரது இரண்டு மகள்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் மூவருக்கும் நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததாகவும் மும்பை சுகாதாரத்துறை தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் போனிகபூர் வீட்டில் பணி செய்து கொண்டிருக்கும் மேலும் இருவருக்கு கொரோனா பாசிட்டிவ் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த இருவரும் தற்போது சுகாதாரத் துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
 
இதனை அடுத்து மீண்டும் போனி கபூர் மற்றும் அவரது இரண்டு மகள்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய மும்பை சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. தயாரிப்பாளர் போனிகபூர் வீட்டில் ஒரே வாரத்தில் மூன்று பேர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது