பணம் திரும்ப வரும்… புகழ் திரும்ப வரும் – பாலிவுட் பற்றி ரஹ்மான் ஆதங்கம்!
ஆஸ்கர் விருதுவரை சென்று இந்தியாவின் புகழை உலகுக்கே எடுத்துக்காட்டிய ரஹ்மானையே பாலிவுட்டில் இயங்கும் வாரிசு அரசியல் கும்பல் வாய்ப்புகளை பறிக்கும் விதமாக நடந்து கொண்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுஹாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு வாரிசு நடிகர்களும் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களும் அவருக்கான படவாய்ப்புகளைப் பறித்ததே காரணம் எனக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த நிலையில், சுஷாந்த்தின் கடைசிப் படமான தில் பேச்சாரோ படத்தில் இசையமைக்க அப்படத்தின் இயக்குநரை ரஹ்மானிடன் செல்ல வேண்டாமெனப் பலரும் தடுத்ததாகவும் இதேபோல் தனக்கான வாய்ப்புகளை சில தடுத்து வருவதாகவும் ரஹ்மான் கூறியிருந்தார். குறிப்பாக தமிழர் ஒருவர் ஹிந்தி பட உலகில் ஆளுமை செலுத்த விரும்பாதவர்களால் ரஹ்மானின் வாய்ப்புகள் பறிக்கப்பட்டு வருவதாக ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதர் ஏ.ஆர்.ரெஹானா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ் சினிமா மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த சில இயக்குனர்கள் மற்றும் ரசிகர்கள் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது சம்மந்தமான பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சேகர் கபூர் ‘நீங்கள் ஆஸ்கர் வாங்கியதுதான் உங்கள் பிரச்சனை. நீங்கள் பாலிவுட்டை விட அதிக திறமை கொண்டவா் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.
அவருக்கு சமூகவலைதளத்தில் பதிலளித்த ரஹ்மான் ‘பணம் திரும்ப வரும். புகழ் திரும்ப வரும். வாழ்வின் முக்கியமான தருணங்கள் திரும்ப வராது.. அமைதியாக இருங்கள். கடந்து செல்வோம். நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய விஷயங்கள் உள்ளன' எனக் கூறியுள்ளார்.