1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : புதன், 16 பிப்ரவரி 2022 (08:49 IST)

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் மும்பையில் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் மும்பையில் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!
பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பிலஹரி இன்று காலமானார்/ அவருக்கு வயது 69 
 
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இசை அமைப்பாளர் பப்பிலஹரி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஏராளமான ஹிந்திப் படங்களுக்கும் தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்த பப்பிலஹரி தமிழில் அபூர்வ சகோகதிரிகள், பாடும் வானம்பாடி, கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 பிரபல இசையமைப்பாளர் பப்பிலஹரி மறைவை அடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்