சிம்பு நடிக்க வேண்டிய படத்தில் புளூசட்டை மாறன்: என்னை கொடுமை சார் இது?

sivalingam| Last Modified வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (20:52 IST)
நடிகர் சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த ’மாநாடு’ என்ற திரைப்படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த படம் கைவிடப்படவில்லை என்றும், சிம்புவுக்கு பதில் பிரபல நடிகர் ஒருவர் நடிப்பார் என்றும் கூறப்பட்டது


இந்த நிலையில் சிம்புவுக்கு பதிலாக யார் நடிப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்த நிலையில் தற்போது சுரேஷ் காமாட்சி புதிய படமொன்றின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த புதிய படத்தில் பிரபல திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படம் சிம்பு நடிக்க இருந்த ’மாநாடு’ திரைப்படத்தின் திரைப்படமா? அல்லது இது புதிய படமா? என்று உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் சிம்பு நடிக்க இருந்த மாநாடு படம்தான் இந்த படம் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இந்த படத்தில் புளூசட்டை மாறன் அரசியல்வாதியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுவதால் இந்த வதந்தி பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு இடத்தில் புளூசட்டை மாறனா? என்று சிம்பு ரசிகர்கள் கொதித்து எழுந்துள்ளனர். எனவே இதற்கு போட்டியாக சிம்பு அறிவித்த ‘மகா மாநாடு’ திரைப்படமும் விரைவில் உருவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது

மேலுஇம் பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனம் தரும் புளு சட்டை மாறன் தன்னுடைய படத்தை தானே எப்படி விமர்சனம் செய்வார் என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்


இதில் மேலும் படிக்கவும் :