வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 பிப்ரவரி 2022 (12:25 IST)

விக்ரமின் ‘மஹான்’ டிரைலர் ரிலீஸ்

விக்ரம் நடித்த ‘மஹான்’ திரைப்படம் வரும் பத்தாம் தேதி ஓடிடியில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி வைரலாகி வருகிறது
 
 விக்ரம், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆகியோர் நடித்த மாஸ் காட்சிகள் சிம்ரன் மற்றும் பாபி சிம்ஹா நடித்த காட்சிகள் மற்றும் ஆக்சன் காட்சிகள் சென்டிமெண்ட் காட்சிகள் இந்த இரண்டு நிமிட டிரைலரில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியான பிறகு இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
லலித் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்க வேண்டிய படம் என்று ரசிகர்கள் அதிருப்தி அடைந்தாலும் ஓடிடியிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.