சிக்கிய பாஜக எம்பி; உச்சநீதிமன்ற நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி?
கர்நாடகா மாநில பாஜக எம்பி ஸ்ரீராமலு உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு லஞ்சம் கொடுப்பது பற்றிய பேசிய வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.
கர்நாடகா மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த பாஜக எம்பி ஸ்ரீராமலு ஸ்டிங் ஆபரேஷன் வீடியோவில் சிக்கியுள்ளார். அதில், சுரங்க ஊழல் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு 160 கோடி ரூபாய் லஞ்சம் கொடுப்பது பற்றி பேசுகிறார்.
மே 12ஆம் தேதி கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதுபோன்ற வீடியோ வெளியாகியுள்ளது பாஜகவிற்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
டுவிட்டரில் இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெல்லாரி ரெட்டி மாபியா மீண்டும் சிக்கியுள்ளனர் என்று பதிவிட்டு வருகின்றனர். மேலும் காங்கிரஸ் டுவிட்டர் பக்கத்தில் பாஜக கர்நாடகவை சூரையாடிய ரெட்டி சகோதரர்களுக்கு எம்.எல்.ஏ. சீட்டு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.