எங்கிருந்தாலும் வாழ்க! – மகளுக்கு சேரன் மறைமுக வாழ்த்து!

Prasanth Karthick| Last Updated: வெள்ளி, 27 டிசம்பர் 2019 (18:50 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற சேரன் தன்னுடன் நிகழ்ச்சியில் இருந்த லாஸ்லியாவுக்கு மறைமுகமாக வாழ்த்துக்கள் சொல்லியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிக்பாஸ் சீசன் 3 பரபரப்பாக ஒளிப்பரப்பாகி வந்தது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த ரியாலிட்டி ஷோவில் சேரன், கவின், லாஸ்லியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆரம்பம் முதலே சேரனை அப்பா என்று அழைத்து வந்த லாஸ்லியா அவரிடம் பாசமாகவும் பழகி வந்தார். சேரனும் தனது மகள் போல லாஸ்லியாவை பாவித்து வந்தார். இந்நிலையில் கவினுடன் ஏற்பட்ட காதலால் லாஸ்லியா சேரனை வருத்தத்திற்கு உள்ளாகும்படி செய்தார். ஊரே மெச்சிய அப்பா – மகள் உறவு லாஸ்லியாவால் உருகுலைந்து போனதாக பார்வையாளர்கள் பலர் லாஸ்லியாவை திட்டி வந்தனர்.

நிகழ்ச்சி முடிந்து அவரவர் தங்களது சொந்த வீடுகளுக்கு திரும்பி விட்ட நிலையிலும் அடிக்கடி பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களை சென்று சந்தித்தும் வருகின்றனர். சமீபத்தில் அபிராமி சேரனை நேரில் சந்தித்த போட்டோ கூட இணையத்தில் ட்ரெண்டானது. இப்படி பலர் சேரனோரு தொடர்பில் இருந்தாலும் அப்பா என்று அழைத்து வந்த லாஸ்லியா மட்டும் தொடர்புக்கு அப்பாலேயே இருக்கிறார்.

இந்நிலையில் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சேரன் ” எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன நான் ஒருவருக்குமட்டும் சொல்லமுடியாமல் போனது மனதுக்கு வருத்தமளிக்கிறது. எங்கிருந்தாலும் மகளாகிய நீயும் தங்கைகளும் அம்மா அப்பாவும் நல்லா இருக்கனும்.. விரைவில் உங்கள் ஆசைக்கான இலக்கை அடைவீர்கள். அதை நான் பார்ப்பேன். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். ” என கூறியுள்ளார்.

சேரன் தான் மகளாக பாவித்த லாஸ்லியாவுக்குதான் மறைமுகமாக வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் என இணையவாசிகள் பேசி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :