வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2017 (22:45 IST)

பயோ பயங்கரவாதம், புலனாய்வு ஊழல்: ஸ்பைடரில் கலக்கும் முருகதாஸ்

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் திரைப்படம் என்றாலே ஏதாவது ஒரு சமூக பிரச்சனை மற்றும் ஊழலை வெளிப்படுத்துவது ஆகிய காட்சிகள் கண்டிப்பாக இருக்கும். குறிப்பாக ரமணா, துப்பாக்கி, கத்தி போன்ற படங்களில் சமூக பிரச்சனைகள் அனல் பறந்தன.



 


இந்த நிலையில் இதுவரை யாரும் தொடாத சப்ஜெக்ட் ஆன புலனாய்வுத்துறையில் உள்ள ஊழல்கள், அதனால் ஒரு நாட்டிற்கு ஏற்படும் இழப்புகள் ஆகியவற்றை அக்குவேறு ஆணி வேறாக 'ஸ்பைடர்' படத்தில் முருகதாஸ் பிரித்து மேய்ந்துள்ளாராம். அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி வரும் பயோ பயங்கரவாதம் குறித்தும் இந்த படத்தின் கதையில் உள்ளதாம்

மேலும் நேற்று வெளியான முதல் பார்வை வீடியோவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால் மகேஷ்பாபு, முருகதாஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த படம் நிச்சயமாக மகேஷ்பாபுவுக்கு ஒரு நல்ல தமிழ் எண்ட்ரியாக இருக்கும் என்றும், இதன்பின்னர் அவர் அதிகமான நேரடி தமிழ்ப்படங்கள் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.