வேற லெவல் டான்ஸ்: பிகில் "வெறித்தனம்" ஒரிஜினல் வீடியோ பாடல்!

papiksha| Last Updated: புதன், 6 நவம்பர் 2019 (11:37 IST)
அட்லீ - விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி கடந்த தீபாவளி தினத்தின்  ஸ்பெஷலாக செப்டம்பர் 27ம் தேதி வெளியான பிகில் படத்தில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து. தற்போது வரை ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி சாதனை படைத்தது வருகிறது. 
பெண்ககள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்த இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருந்தார். உடன் ஜாக்கி ஷரோப், கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். 
 
தற்போது வரை அனைத்து திரையரங்குகளிலும்  வெற்றிநடை போட்டு வரும் பிகில் படத்தின் "வெறித்தனம்" பாடல் ஒன்றை படக்குழு யுடியூபில் வெளியிட்டுள்ளனர். விஜய்யின் டான்ஸ் இந்த பாடலில் அமர்க்களமாக உள்ளது. இதற்கு முன்னர் இப்படத்தில் இடம்பெற்ற "பிகிலு பிகிலு பிகிலுமா" என்ற  பாடல் வெளியாகி தற்போது ட்ரெண்டில் 4 வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக "வெறித்தனம்" பாடலை ஒரே நாளில் நமபர் 1 ட்ரெண்டில் கொண்டுவர விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக ஷேர் செய்து வருகின்றனர். 
 


இதில் மேலும் படிக்கவும் :