செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 6 நவம்பர் 2019 (14:06 IST)

தியேட்டரில் மனைவியுடன் ரஜினி! பிகில் படத்தை பார்க்க சென்றார்களா?

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருந்த பிகில் திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தின் ஸ்பெஷலாக வெளிவந்தது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டுமல்லாமல் திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்திருந்தனர். 
இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிகில் திரைப்படத்தை திரையரங்கில் தனது மனைவி லதாவுடன் பார்க்கும் புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து ரஜினியிடம் கேட்டதற்கு, .ஜி மகேந்திரன் நடிப்பில் வெளிவந்த மலையாள திரைப்படம் ஒன்றை தனது மனைவியுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது 4ஃபிரேம்ஸ் திரையரங்கில் பார்த்து ரசித்ததாக கூறினார். 
மேலும், விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள பிகில் படத்தையும் இருவரும் சேர்ந்து பார்த்து உள்ளோம் என்று கூறியதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கிடையில் ரஜினியை வைத்து இயக்குனர் அட்லீ,  பாட்ஷா 2 படத்தை இயக்கவுள்ளதாகவும், அதற்கான கதைகளை கூட தயார் செய்துள்ளதாகவும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அட்லீ கூறியிருந்தார். தலைவர் மட்டும் ஓகே சொல்லிவிட்டால் அட்லீ ஷூட்டிங்கை துவங்கிவிடுவாராம். எனவே பிகில் படத்தில் அட்லீயின் இயக்க நுணுக்கங்கள் எப்படி இருக்கிறது என்பதை காணவே பிகில் படத்தை ரஜினி தியேட்டரில் சென்று பார்த்திருக்கலாம் என கூறப்படுகிறது.