திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : சனி, 19 அக்டோபர் 2019 (12:23 IST)

வடசென்னை ரவுடி ராயப்பன்: துவம்சம் செய்யும் "பிகில்" -படத்தின் கதை இது தான்!

தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். இப்படம் வருகிற தீபாவளி தினத்தை முன்னிட்டு ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் தற்போது படக்குழுவினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் படத்தின் கதை இணையத்தில் கசிந்து வைரலாக பரவி வருகிறது. 


 
அப்பா விஜய்  ராயப்பன் என்ற கதாபாத்திரத்திலும் மகன் விஜய் மைக்கேல் என்ற கதாபாத்திரத்திலும் இரு வேடங்களில் நடித்துள்ளார் தளபதி. வடசென்னை லோக்கல் ரவுடியான ராயப்பன் ஏரியாவில் பெரிய கால்பந்தாட்ட வீரராகவும் தாதாவாகவும் கெத்தாக இருந்து வருகிறார். அவர் தனது மகனை பெரிய கால்பந்தாட்ட வீரராக்க வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்து வரும் சமயத்தில் விளையாட்டில் வரும் அரசியல் அவரது கனவை சுக்கு நூலாக்கி விடுகிறது. இதற்கிடையே உடன் இருப்பவர்களாலேயே துரோக செயலால் மைக்கேல் வீழ்கிறார். 
 
மேலும் அப்பாவான ராயப்பனையும் கால்பந்தாட்டத்தில் சூரனாக இருக்கும் மைக்கேலின் நண்பன் கதிரையும் ரவுடி கும்பல் கொலை செய்து விடுகின்றனர். பின்னர் தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் மகளிர் கால்பந்து அணிக்கு பயிற்சி அளித்துக்கொண்டே, மற்றொரு பக்கம் தனது தந்தை மற்றும் நண்பனின் மரணத்திற்கு பழிவாங்கும் விதத்தில் பிகில் படத்தின் கதை உருவாகியுள்ளதாக கூறி இந்த கதை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.