1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 8 ஆகஸ்ட் 2018 (10:25 IST)

கருணாநிதிக்கு மெளன அஞ்சலி செலுத்திய பிக்பாஸ் போட்டியாளர்கள்

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மறைந்த செய்தி பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. வெளியுலக தொடர்பே இல்லாமல் இருக்கும் அவர்களுக்கு, பிக்பாஸ் நேற்று கருணாநிதியின் மறைவு செய்தியை கூறினார். 
 
சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில், 'தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான டாக்டர் மு.கருணாநிதி இன்று மாலை காலமானார். தமிழுக்கு தமிழினத்திற்கும் அவர் ஆற்றிய பணிகள் போற்றத்தக்கது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்துவோம் என்று பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கூறினார்
 
கருணாநிதியின் மறைவு செய்தி கேட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர். கருணாநிதியின் மறைவு பிக்பாஸ் போட்டியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.