1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2019 (08:30 IST)

வனிதாவை காப்பாற்ற பிக்பாஸ் எடுத்த அதிரடி முடிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எவிக்சன் கிடையாது என்றாலும் அடுத்த வாரம் வனிதாவை வெளியேற்ற பார்வையாளர்கள் முடிவு செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் கருத்துக்களில் இருந்து தெரிய வருகிறது. 
 
 
இதனை அடுத்து வனிதாவை காப்பாற்ற அடுத்த வார பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக அவரை நியமனம் செய்ய பிக்பாஸ் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த வார டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்ட வனிதாவை தேர்வு செய்து அதன் பின்னர் அவரை அடுத்த வார கேப்டனாக நியமனம் செய்ய பிக்பாஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 
வனிதா பிக்பாஸ் வீட்டின் அடுத்த வார கேப்டன் ஆகிவிட்டால் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது. எனவே அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து வனிதா தப்பி மீண்டும் ஒரு வாரம் பிக்பாஸ் வீட்டில் இருக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து வனிதா தப்பிவிட்டால் அடுத்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது யாராக இருக்கும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது 
 
 
கவின், சாண்டி, தர்ஷன், லாஸ்லியா, சேரன் ஆகிய ஐவரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து இப்போதைக்கு வெளியேற வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது. எனவே முகின் அல்லது ஷெரின் ஆகிய இருவரில் ஒருவர் அடுத்த வாரம் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது 
 
 
கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவை கடைசி வரை பிக்பாஸ் கொண்டு சென்றது போல் இந்த நிகழ்ச்சியிலும் வனிதாவை கடைசி வரை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது