செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (09:17 IST)

மீண்டும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கிராமத்து டாஸ்க்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிராமத்து டாஸ்க் என்றாலே போட்டியாளர்கள் அஞ்சி நடுங்குவார்கள் என்பது கடந்த முறை நடந்த கிராமத்து டாஸ்க் மூலம் தெரிய வந்தது. கடந்த முறை நடந்த கிராமத்து டாஸ்க்கில் சேரன் மற்றும் மீராமிது இடையே நடந்த சண்டையை இன்னும் யாராலும் மறக்க முடியாது
 
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் மீண்டும் கிராமத்து டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீடு இரண்டு கிராமங்களாக பிரிந்து உள்ளதாகவும் அதில் கலந்துகொண்ட 8 போட்டியாளர்கள் நான்கு நான்காக பிரிந்து இருபிரிவாக இருக்கிறார்கள்
 
இதனை அடுத்து பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கிராமத்து கலையை கற்றுக்கொடுக்க புதிய விருந்தாளில் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். அவரிடம் கலையை கற்றுக்கொள்ளும் போட்டியாளர்கள் மாலையில் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்பது பிக்பாஸ் நிபந்தனைகளில் ஒன்றாக உள்ளது. இந்த டாஸ்க்கில் சேரன் மற்றும் சாண்டி அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது