செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஜூலை 2020 (20:41 IST)

குழந்தையின் பெயரை அறிவித்த பிக்பாஸ் டேனியல்

daniel
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகருமான டேனியல், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் அவருக்கு டெனிஷ் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது என்பதும் இந்த தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் டேனியல் மற்றும் டெனிஷா தம்பதியின் மகனுக்கு தற்போது பெயர் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து டேனியல் தனது சமூக வலைத்தளத்தில் ’கெய்சன் ஹேய்ஸ் டேனியல்’ என்ற பெயரை தனது மகனுக்கு வைத்துள்ளதாக கூறி உள்ளார் இதனையடுத்து டேனியல் மகனுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
டேனியல் தற்போது இரண்டு தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகவும், இந்த படங்கள் குறித்த அறிவிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது