வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (12:16 IST)

வடிவேலுவை சந்தித்த பிக்பாஸ் எலிமினேஷன் ஆன போட்டியாளர்!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் எலிமினேஷன் ஆன நிலையில் இன்று அவர் நடிகர் வடிவேலுவை சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா கடந்த சில நாட்களுக்கு முன்னர் எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பதும் இவர் ஜெர்மனியை சேர்ந்த தமிழ் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ’நாய் சேகர்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் வடிவேலுவை மதுமிதா சந்தித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
வடிவேலு மதுமிதா சந்திப்பின்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகள் பாடகி தீ உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது