1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : ஞாயிறு, 10 ஜனவரி 2021 (10:26 IST)

வெளியே வந்ததும் என்ன பிளான்: கமலிடம் தெரிவித்த பிக்பாஸ் கண்டஸ்டண்ட்ஸ்!

வெளியே வந்ததும் என்ன பிளான்: கமலிடம் தெரிவித்த பிக்பாஸ் கண்டஸ்டண்ட்ஸ்!
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விட்டு வெளியே சென்றதும் என்ன செய்யப்போகிறோம் என்கிற திட்டத்தை ஒவ்வொரு போட்டியாளர்களும் கமல்ஹாசனிடம் தெரிவித்தனர் 
 
முதலாவது தெரிவித்த ஷிவானி, தான் இன்னும் எந்தவித திட்டமும் யோசிக்கவில்லை என்று கூறினார். இதனை அடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்ததால் ஏகப்பட்ட மன அழுத்தம் எனக்கு இருப்பதால் அதிலிருந்து விடுபட கோவா செல்ல போகிறேன் என்று பாலாஜி கூறினார்,
 
ரோப் டாஸ்க் காரணமாக உடலெல்லாம் வலிக்கிறது என்றும் அதனால் பாடி மசாஜ் செய்யவேண்டும் என்று ரம்யா கூறுகிறார். சோம் தனது நாய் குட்டியான குட்டுவுடன் வாக்கிங் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கின்றார்
 
மேலும் தன்னுடைய குழந்தையுடன் நேரம் செலவழித்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது என்றும் அதனால்தான் குழந்தையுடன் விளையாடுவேன் என்று ஆரி கூறுகிறார் கடைசியாக வீட்டுக்கு போனதும் ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு சாப்பிட்டு விட்டு நேராக வண்டியை எடுத்துக்கொண்டு காட்டுக்கு போய் விடுவேன் என்று ரியோ கூறுகிறார். இன்றைய முதல் புரமோவில் உள்ள இந்த கலகலப்பான உரையாடலின் வீடியோ வைரலாகி வருகிறது