செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 21 செப்டம்பர் 2020 (18:08 IST)

ஸ்டார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் வெளிவந்த பிக்பாஸ் போட்டியாளர் குறித்த கிட்டத்தட்ட  உறுதி செய்யப்பட்ட பட்டியல் வெளியானது
 
இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகைகள் ரம்யா பாண்டியன், ஷிவானி, பாடகர் வேல்முருகன், ஆஜித், அர்ச்சனா, நடிகை ரேகா, ஜித்தன் ரமேஷ், ரியோராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது 
 
நடிகர் அபுஹாசன் மற்றும் ஆதித்யா பாஸ்கர் ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என தெரிகிறது
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள ஸ்டார் ஓட்டலில் தங்கி இருப்பதாகவும் அதே ஓட்டலில் ஏற்கனவே கடந்த நான்கு மாதங்களாக கமலஹாசன் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
கமலஹாசன் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்கள் 14 நாட்கள் அந்த ஸ்டார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அதன் பின்னரே அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் செய்திகள் உள்ளது