செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 21 செப்டம்பர் 2020 (12:47 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதியதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வென்ற ஆஜித் போட்டியாளர்களில் ஒருவர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது 
 
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் டைட்டில் வென்ற ஆஜித், அதன் பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு சில பாடல்களைப் பாடியுள்ள நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் விஜய் டிவியில் நடந்த டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் பட்டம் வென்ற கேப்ரில்லாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது 
 
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒரு இளம் காதல்ஜோடி பரபரப்பை ஏற்படுத்தும் என்ற வகையில் அஜீத் மற்றும் கேப்ரில்லா இடையே காதல் காட்சிகளை பிக்பாஸ் நிர்வாகம் நிகழ்ச்சியின் பரபரப்புக்காக ஜோடிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்