புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 அக்டோபர் 2021 (12:57 IST)

பிக்பாஸ் வீட்டில் ரகசியமாக அபிஷேக் செய்யும் வேலை? – ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சினிமா பையன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது.

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. இந்த பிக்பாஸ் போட்டியில் பங்கேற்பவர்கள் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருப்பதுடன் செல்போன் பயன்படுத்தவும் தடை உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் உள்ள சினிமா பையன் என்று புகழ்பெற்ற அபிஷேக் சில மணி நேரம் முன்னதாக அஜித்தின் வலிமை பட புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதில் கமெண்ட் செய்துள்ள நெட்டிசன்கள் “பிக்பாஸ் வீட்டுக்குள்ள செல்போன் யூஸ் பண்ணக்கூடாதே.. பிக்பாஸ் இங்க பாருங்க” என கிண்டலாய் பதிவிட்டு வருகின்றனர்.