1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 22 ஜூன் 2018 (11:27 IST)

ஐஸ்வர்யாவுக்கு முத்தம் கொடுக்கும் ஜனனி ஐயர்: என்னடா நடக்குது?

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் எபிஸோட்டிற்கான புரோமா விடியோ வெளியிடுவது வழக்கம். அதன்படி, இன்று விஜய் டிவி முதல் புரோமோ வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது.
 
அதில், ஹவுஸ்மேட்ஸ்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்த டாஸ்க்கின் படி செண்ட்ராயன் தலையில் முட்டை  உடைக்கப்படுகிறது. பாலாஜி குழந்தை போல தவழ்ந்து செல்கிறார். ஜனனி ஐயர் ஆண் வேடமிட்டு ஐஸ்வர்யாவுக்கு முத்தம் கொடுக்கிறார். பொன்னம்பலத்தை நீச்சல் குளத்தில் தள்ளி விடுகிறார்கள். இதற்கிடையே பாலாஜி தனது மனைவி நித்யாவின் கன்னத்தை தட்டுகிறார். இதற்கு நித்யா கோவம் அடைகிறார்.