பிக்பாஸ் முகின் ராவ்வின் தந்தை காலமானார் - மிகுந்த கவலையில் ரசிகர்கள்!

papiksha| Last Updated: செவ்வாய், 28 ஜனவரி 2020 (11:13 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 17 பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மலேசியாவை சேர்ந்த முகன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து பெரிய நடிகர்களுக்கு சமமாக பிரபலமானார். 
 
இந்நிலையில் தற்போது முகின் ராவ் வீட்டில் ஒரு பேரிழப்பு நடந்துள்ளது. ஆம்... முகினின் தந்தை பிரகாஷ் ராவ் (52) நேற்று மாரடைப்பு காரணமாக மாலை 6:20 மணியளவில் திடீரென்று உயிரிழந்தார். மேடை பாடகரான பிரகாஷ் ராவ்வின் மரணம் மலேசிய மற்றும் தமிழ் ரசிகர்களை பெரும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
இன்று அவரது இறுதி சடங்குகள் மலேசியாவில் உள்ள இல்லத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த சம்பவத்தால் முகின் ராவ்வின் ரசிகர்கள், நண்பர்கள், உடன் பங்கேற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது தோழியான பிக்பாஸ் அபிராமி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்  ”உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் பிரகாஷ் ராவ். தைரியமாக இரு பேபி” என முகினுக்கு ஆறுதல் கூறியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :