1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 3 ஜூலை 2017 (16:40 IST)

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நமிதாவின் செய்கையால் கண்ணீர் விட்ட பிரபலம்!

சின்னத்திரையில் வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, இதில் 15 பிரபலங்கள், 30 கேமிராக்கள், 100 நாட்கள், ஒரே வீட்டில் எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தான். இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கிண்டலடித்தாலும் ரசிகர்களால் இன்று அதிகம் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக மாறியுள்ளது. திரையில் பார்த்த பிரபலங்கள் வேறொரு கோணத்தில்  தெரிகின்றனர்.
 
 
குறிப்பிட்டு சொன்னால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை நமிதாவை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகின்றனர். இந்நிலையில் டான்ஸ் மாஸ்டர் கலா ஒரு பேட்டியில், நமிதா மாதிரி பக்தியுடைய பெண்ணை பார்ப்பது கஷ்டம். கடவுள் கிருஷ்ணர் என்றால்  அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். சரியான நேரமும், இடமும் கிடைக்கும்போது 'ஹரே ராமா. ஹரே கிருஷ்ணா' என  எதைப்பற்றியும் யோசிக்காமல் மந்திரம் சொல்ல ஆரம்பிச்சிடுவார்.
 
தான் இருக்கும் இடத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள நமிதா நினைக்கிறார். தான் நடிகையாக இருந்தாலும், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்து, தானும் சாதாரணமானவள்தான் என்பதை புரிய வைத்திருக்கிறார். அந்த நிமிஷம் நான் கண்கலங்கிவிட்டேன் என்று டான்ஸ் மாஸ்டர் கலா தெரிவித்துள்ளார்.