திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 10 ஜூன் 2020 (22:05 IST)

அம்மாவின் பிறந்தநாளை காதலி மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடிய பிக்பாஸ் முகென்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 17 பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மலேசியாவை சேர்ந்த முகன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகனை மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது.

தற்போது தனது கேரியரில் அதிக கவனத்தை செலுத்தி வரும் முகன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்ததும் தனது காதலி யார் என்பதை அறிவித்தார். இதற்கு முன்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அபிராமி அவருடன் காதல் வயப்பட்டார். ஆனால், முகனோ தனக்கு வெளியில் நதியா என்ற வேறொரு பெண் இருப்பதாக கூறி நல்ல தோழியாக உன்னை எனக்கு பிடிக்கும் என கூறி நிறுத்திவிட்டார்.

இதையடுத்து வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த போது முகனின் தந்தை இறந்துவிட்டார். அந்த துயரத்தில் இருந்து மீண்டு வந்த அவர் தற்போது இன்று தனது காதலியுடன் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள இந்த போட்டோவிற்கு இணையவாசிகள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.