காதலை ஒப்புக்கொண்டார் முகின்..! பதிலுக்கு அவரும் க்ரீன் சிக்னல் கொடுத்துட்டாராம்!

Papiksha| Last Updated: வியாழன், 10 அக்டோபர் 2019 (17:19 IST)
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் டைட்டில் கார்ட் வென்று பெரும் புகழும் சம்பாதித்துள்ள முகினுக்கு பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் முகினுக்கு தற்போது இன்னொரு இன்ப அதிர்ச்சி நடந்துள்ளது. 


 
பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போது அபிராமி முகினை காதலிப்பதாக கூறிவந்தார். ஆனால், அவர் தான் வெளியில் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி நீ எனக்கு ஒரு நல்ல தோழி அவ்வளவு தான் கூறியிருந்தார். முகின் கூறியிருந்த அந்த பெண் யார் என்பதை பற்றியும் முகின் உண்மையில் யாரை காதலிக்கிறார் என்பதை பற்றி தெரிந்துகொள்ளவும் அனைவரும் மிகுந்த ஆர்வத்தில் இருந்து வந்தனர். 


 
இந்நிலையில் பிக்பாஸில் டைட்டில் வென்று பேட்டி கொடுத்து வரும் முகின் தற்போது தனது காதலை உறுதி செய்துள்ளார். அந்த பேட்டியில், உங்கள் காதலை நதியாவிடம் சொல்லி விட்டீர்களா அவருடைய பதில் என்ன ? அவர் ஓகே சொல்லிவிட்டாரா ? என கேட்டதற்கு, சிரித்தபடியே ஆம், எல்லாம் சரியாகி விட்டது ஓகே சொல்லிட்டாங்க. இன்னும் சிறிது நாளில் அதனை நாம் ரசிகர்களுக்கு அறிவிக்கலாம் என்று தான் நினைத்திருந்தேன் என தனது காதலை உறுதி செய்துள்ளார் முகின். 


இதில் மேலும் படிக்கவும் :