செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 10 ஜூன் 2020 (20:17 IST)

பெட் கட்றோம்... இந்த பிரபல தமிழ் நடிகை யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்..!

கடந்த 2002 ஆம் ஆண்டு ஹிந்தி தொலைக்காட்சி உலகில் ஒளிபரப்பான “ஆட்டி ரஹெங்கி பஹ்ரைன்” என்ற தொடரின் மூலமாக சினிமாவில் நுழைந்த நடிகை நிகிதா துக்ரல் தமிழில் கடந்த 2013ஆம் ஆண்டு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா ஷெட்டி, சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான “அலெக்ஸ் பாண்டியன்” படத்தில் நடித்து அறிமுகமானார்.

அந்த படத்தில்   சந்தானத்தின் தங்கையாக காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதையடுத்து  “குறும்பு” என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்த அவருக்கு தொடர்ந்து பட வாய்க்குள் கிடைக்காததால் சின்ன சின்ன ரோல்களில் தலைகாட்டி வந்தார்.

இதையடுத்து ஐட்டம் டான்ஸ் ஆட ஆரம்பித்த அவர் தென்னிந்திய திரை உலகின் கிளாமர் ராணியாக வலம் வர துவங்கினார்.  கவர்ச்சி நடிகை என்ற பெயர் கிடைத்தாலும் கிடைக்கும் வாய்ப்பை தட்டிக்கழிக்காமல் சரியாக பயன் படுத்திகொண்ட அவர் “சரோஜா” படத்தில் “கோடான கோடி” பாடல் முதல் “பாயும் புலி” படத்தில் வரும் “நான் சூடான மோகினி” பாடல் வரை தென்னிந்திய சினிமாவின் அனைத்து மொழி படங்களுக்கும் ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார்.


அதையடுத்து திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்வில் செட்டில் ஆன இவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயமூட்டும் வகையில் பேய் போல் முகம் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆல் அடையாளமே தெரியாத இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I got scared myself.