1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 9 நவம்பர் 2017 (11:27 IST)

பிக்பாஸ் கமல் காம்போ மெனு; டுவீட் செய்த காயத்ரி ரகுராம்

பிக்பாஸ் நிகழ்ச்சி பல சர்ச்சைகளுக்கு பிறகு வெற்றிகரமாக முடிந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் வாழ்க்கை  மாறியுள்ளது.

 
பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள் அனைவரும் தற்போது பிஸியாகி விட்டனர். ஓவியா விளம்பரம் மற்றும் படங்களில் பிசியாகிவிட்டார், ஆரவ், ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகிவிட்டார்கள். வையாபுரி சில படங்களிலும், ரைசா கதாநாயகியாகவும்,  ஜுலி தொகுப்பாளினியாகி விட்டார்.
 
இந்நிகழ்ச்சியின் வெளியேறிய போட்டியாளர்கள்  தொடர்ந்து தங்களுடைய கருத்துகளை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஒரு ஹோட்டலில் “பிக்பாஸ் கமல் காம்போ” என்று மெனு போட்டுள்ளனர். இதில், காயத்திரி சூப்,  ஓவியா பிரியாணி, ஆரவ் புரோட்டா, ஜுலி ஜுஸ் என ஒவ்வொருவர் பெயரையும் குறிப்பிட்டு மெனு போடப்பட்டுள்ளது.  இதனை பிக்பாஸ் போட்டியில் கல்ந்து கொண்ட காயத்ரி ரகுராம் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஷேர் செய்துள்ளார்.