வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2018 (21:31 IST)

தேசி விருது பெற்ற பிக்பாஸ் ஜூலி; ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜூலிக்கு தேசி அவார்ட்ஸ் 2017 என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஜூலிக்கு பட வாய்ப்புகளும், விளம்பர வாய்ப்புகளும் வந்தவண்ணம் உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதலில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அவர் ஹீரோயினாக நடிக்கும் உத்தமி படத்தில் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட பெண்ணாக நடிக்கிறார். இந்நிலையில் தற்போது தேசி விருதுகள் 2017 நிகழ்ச்சியில் ஜூலிக்கு  'The Most Trending Face Of The Year 2017' விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அளவு சமூக வலைதளங்களில் டிரெண்டான முகம்  என்றால், அது ஜுலியினுடையதுதான். அதனால் அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜூலி தனக்கு இப்படி ஒரு விருதை வழங்கிய தேசி விருதுகள் 2017 குழுவுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். மேலும் மேடையில் விருது வாங்கும்போது எடுத்த புகைப்படம் மற்றும் செல்ஃபி ஒன்றையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதனால் விருது பெற்ற ஜூலியை பாரட்டி அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.