வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2018 (21:31 IST)

ட்விட்டரில் விஜய்க்கு நன்றி சொன்ன பிக்பாஸ் ஜூலி

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கலைஞர் டிவியில் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் ஜுலி மெல்ல  திரையுலகத்திலும் கலக்கி வருகிறார். விமல் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்த அவர், தற்போது உத்தமி என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
படங்கள் மட்டுமல்லாது அவ்வப்போது விளம்பரத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அப்பளத்தை அடுத்து ஆட்டோமொபைல் ஆயிலுக்கு விளம்பரம்  செய்துள்ளார் ஜூலி. இந்த நிலையில் அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்திற்கு நன்றி விஜய் என்று கூறி ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.
 
இதனை பார்த்த நெட்டிசன்கள் வழக்கம் போல் அவரை கலாய்த்தும் சிலர் அவரை புகழ்ந்தும் ட்வீட் செய்துள்ளனர். மேலும் யார் அந்த விஜய் என்று பலரும்  கேள்வி எழுப்பியுள்ளனர். ஜூலி தெரிவித்த அந்த விஜய் யார் என்பதை அறிய பலரும் ஆர்வமாக உள்ளனர். ஒரு சிலரோ கேமரா மேனாக இருக்கலாம் வாய்ப்பு  உள்ளது என்கிறார்கள்.