புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (18:22 IST)

போட்டோ ஷூட் மீதான பைத்தியம் முத்திடுச்சா..? காட்டுவாசி கெட்டப்பில் ஜூலி!

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை நெட்டிசன்கள்.

பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பிறகு விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். அதே போல இவர் என்ன செய்தாலும் கலாய்ப்பதற்கென்று ஒரு கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது. அதற்கு ஏற்றார் போல ஜூலியும் இடைவிடாமல் அடுத்தடுத்து கன்டென்ட் கொடுத்துக்கொண்டு தான் வருகிறார்.

அந்தவகையில் கடந்த சில தினங்களாக மாடர்ன் போட்டோ ஷூட் நடத்தி இணையவாசிகளை வாய்பிளக்க செய்த ஜூலி தற்ப்போது காட்டுவாசி கெட்டப்பில் வித்யாசமான போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ள நபர் ஒருவர் " ஜூலி உங்கள் போராடும் குணம்.மெளனத்தின் மொழி.. விரைவில் எதிர் விணையை விளக்கும். கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் எதிர் விமர்சனங்களை  அடியோடு சாய்க்கும்
வரும் நாள்  உனக்காகட்டும்,"உன்னை வெல்ல உலகில் யாரும் இல்லை என்ற உணர்வைதரும்" செம மோட்டிவேஷனல் கேப்ஷன் கொடுத்துள்ளார். எல்லாம் ரைட்டு ப்ரோ ஆனால், ஜூலி ஆரம்பத்தில் விதைத்த விதை அப்படி என்ன பண்றது...