செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (16:30 IST)

என்ன தப்பா நெனச்சுடாதடா - கண்கலங்கி அழுத சாண்டி!

நண்பர்களுக்குள் பிரிவினை , காதலால் பிரிந்த நண்பர்கள் என்றெல்லாம் பிக்பாஸ் வீட்டின் நிலைமை மாறி வருகிறது. ஆரம்பத்திலிருந்தே கவின் , சாண்டி , தர்ஷன் , முகன் என ஒற்றுமையாக இருந்த நண்பர்கள் தற்போது லொஸ்லியாவினால் சண்டையிட்டு பிரிந்துள்ளனர். 


 
லொஸ்லியா விஷயத்தில் கவினுக்கும் சாண்டிக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை இரண்டு நாட்களாக முடிவுக்கு வராமல் செல்கிறது. இதனால் சாண்டி மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளானார். தர்ஷன் மற்றும் முகன் சாண்டிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். 
 
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள மூன்றாவது ப்ரோமோவில் சாண்டி கவினிடம் " என்னை மட்டும் தப்பா நெனச்சுடாதடா என கண் கலங்கி கூறுகிறார்". இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் சாண்டிக்கு ஆதரவு குரல் எழுப்பியுள்ளனர். நான்கு நண்பர்களுக்கு இடையில் ஒரு பெண் வந்துவிட்டாலே அவர்களை இப்படித்தான் பிரித்து விடுவார்கள். இது தான் இப்போது பிக்பாஸ் பாய்ஸ்களுக்கு நடந்துள்ளது என ஆளாளுக்கு கூறி வருகின்றனர்.