புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (10:18 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சக்தி; கடுப்பான காயத்ரி!

பிக்பாஸ் வீட்டில் டாஸ்கில் ரைசா மட்டும் சரியான காரணங்களை கூறியதால் அவர் மட்டும் வெளியேற்றப்படும் பட்டியலில்  இடம்பெறவில்லை. மற்ற 7 போட்டியாளர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றனர். போட்டியாளர்கள் அனைவரும் வையாபுரியை தேர்ந்தெடுத்து, அவரை வெளியேற்றப்படும் பட்டியலில் இருந்து காப்பாற்றினார்கள்.
 
 
பின்னர் சரியான பதில் சொன்னதால் காயத்ரி மற்றும் பிக்பாஸால் கணேஷ் வெங்கட்ராமன், பிந்து மாதவி ஆகியோர் காப்பாற்றப்படுவதாக கமல் அறிவித்தார். இந்நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர்களில் சினேகன், ஆரவ், சக்தி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
 
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றுபேர் எலிமினேஷனில், இதில் யார் போனால் நீங்கள் கவலைப்படுவீர்கள் என்று கமல்ஹாசன் கேட்கின்றார். அப்போது காயத்ரி பேசும்போது ஷக்தி போனால் என்னையும் அனுப்பிவிடுங்கள் என்றார். ரைசா  கூறுகையில் சினேகன் அவர்கள் போனால் எனக்கு கஷ்டம் தான். அதோடு சக்தி போனால் காயத்ரிக்கு அதிக கஷ்டம், அப்போது அவங்களுடைய ட்ரெஸ் எங்களுக்குதான் வரும் என்றார். இதனால் கோபமானார் காயத்ரி.  
 
இதனால் காயத்ரி மற்றும் ரைசா இடையே மீண்டும் பிரச்சனை உருவாகிவுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று மக்களின்  ஓட்டுகளின் அடிப்படையில் சக்தி வெளியேற்றப்பட்டார்.