செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 6 நவம்பர் 2021 (15:04 IST)

கொளுத்திப்போட்ட பட்டாசு எல்லாம் பயங்கரமா வெடிச்சிட்டு இருக்கு!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆயுத பூஜை, தீபாவளி கொண்டாட்டம் என அனைத்து திருநாளையும் வீட்டில் இருந்தபடியே போட்டியர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டம் முடிந்து யார் இந்த வாரம் வெளியேற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 
இன்று கமல் நிகழ்ச்சிக்கு வந்து எவிக்ஷன் கண்டிப்பாக இருக்கிறது என கூறி கெடுபிடி காட்டியுள்ளார். தீபாவளி என்பதால் விக்ஷன் எல்லாம் இருக்காது என ஆடியன்ஸ் பலரும் கூறிவந்த நிலையில்   தீபாவளிக்கும் சலுகைகள் இருக்கும் செலவு இல்லாமல் இருக்குமா என கூறி செம ட்விஸ்ட் வைத்துள்ளார். எனவே இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்பது நிகழ்ச்சியின் ஸ்வாரஸ்யத்தை கூட்டும்.