1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 5 நவம்பர் 2021 (13:40 IST)

’விக்ரம்’ படத்தின் முதல் வியாபாரம்: சோனி நிறுவனம் வாங்கியது!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’விக்ரம்’ படத்தின் முதல் வியாபாரம் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் உரிமையை சோனி நிறுவனம் மிகப்பெரிய தொகை பெற்றுள்ளதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இது ’விக்ரம்’ படத்தின் முதல் யாபாரம் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன் படத்திற்கு முதன் முறையாக அனிருத் இசையமைத்துள்ளதால் இந்த படத்தின் பாடல்கள் மிகப் பெரிய தொகைக்கு விற்பனை ஆகியுள்ளதாக டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த படத்தின் சிங்கிள் பாடல் மிக விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது