1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (16:53 IST)

தீபா, தீபக் வரலாற்றில் இடம்பிடிப்பார்கள்: செல்லூர் ராஜூ

இந்த ஒன்றை மட்டும் செய்தால் தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரும் வரலாற்றில் இடம் பிடிப்பார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் ஜெயலலிதா வாழ்ந்த வேட்கா இல்லத்தை தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரிடமும் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து சென்னை மாவட்ட கலெக்டர் சமீபத்தில் வேதா இல்ல சாவியை தீபக் மற்றும் தீபாவிடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இதுகுறித்து கூறிய போது, வேதா இல்லத்தை ஜெயலலிதா நினைவிடமாக மாற்ற தீபா மற்றும் தீபக் தாமாக முன்வந்து அனுமதி அளித்தால் வரலாற்றில் இடம்பெறுவார்கள் என்று கூறினார்.
 
மேலும் ஜெயலலிதா நினைவு இல்லமாக வேதா இல்லத்தை மாற்றினால் இந்தியா மட்டுமின்றி உலக சுற்றுலா பயணிகளும் சுற்றி பார்க்க ஆர்வம் காட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.