செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (07:31 IST)

தலைகீழ நின்னாலும் நான் பிக்பாஸிற்கு போகமாட்டேன் - நடிகை சுனைனா!

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியின் அடையாளமாக மாறியுள்ளார். அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆதரவைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஜூன் மாதம் ஒளிபரப்பாக இருந்த பிக்பாஸ் சீசன் 4 கொரோனா லாக்டவுனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4க்கான வேலைகள் துவங்கிவிட்டதால் தமிழிலும் இதற்கான வேளைகளில் இறங்கி திட்டம் போட்டு வருகின்றனர்.

அந்தவகையில் முதற்கட்ட வேலையாக போட்டியார்களை தேர்வு செய்து வருகின்றனர். அதன்படி, நடிகை சுனைனா , அதுல்யா ரவி, கிரண் ரதோட் , கனா காணும் காலங்கள் இர்பான் , குக் வித் கோமாளி புகழ் , ரம்யா பாண்டியன் , காமெடி நடிகை வித்யூ லேகா ராமன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் தீயாக பரவியது.

இந்த நிலையில் தற்ப்போது இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ள நடிகை சுனைனா தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு சென்று விட்டால் என்னுடைய படங்களை யார் முடிப்பது.?  ஒருபோதும் நான் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன். நன்றி என்று குறிப்பிட்டு வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டார்.