திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (07:28 IST)

பிக்பாஸ் 4 செம கலாட்டாவா இருக்கபோகுது - இவங்கல்லாம் தான் போட்டியாளர்கள்!

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியின் அடையாளமாக மாறியுள்ளார். அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆதரவைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஜூன் மாதம் ஒளிபரப்பாக இருந்த பிக்பாஸ் சீசன் 4 கொரோனா லாக்டவுனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4க்கான வேலைகள் துவங்கிவிட்டதால் தமிழிலும் இதற்கான வேளைகளில் இறங்கி திட்டம் போட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தற்ப்போது முதற்கட்ட வேலையாக போட்டியார்களை தேர்வு செய்து வருகின்றனர். அதன்படி, நடிகை அதுல்யா ரவி, கிரண் ரதோட் ,  கனா காணும் காலங்கள் இர்பான் , குக் வித் கோமாளி புகழ் , ரம்யா பாண்டியன் , காமெடி நடிகை வித்யூ லேகா ராமன் உள்ளிட்டோர் இப்போதைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.