திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 20 அக்டோபர் 2020 (12:43 IST)

சுரேஷ் அல்டிமேட்... இன்னைக்கு ஸ்வாரஸ்யத்திற்கு பஞ்சமே இருக்காது!

நாடா இல்லை காடா என்ற கான்செப்டில் பிக்பாஸ் புதிய டாஸ்க்கை போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளனர். இதில் சொர்க்கபுரி ராஜா குடும்பம் மற்றும் மாயாபுரி அரக்க குடும்பம் என போட்டியாளர்களை இரண்டு கோஷ்டியினராக பிரித்து பயங்கரமான டெஸ்ட் வைத்துள்ளார் பிக்பாஸ்.

இதில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி சிலையாக மறந்து வெல்லப்போவது யார் என்பது சுவாரஸ்யத்தை தூண்டுகிறது. அரக்கன் குடும்பத்து தலைவனாக சுரேஷ் சக்ரவர்த்தி பக்காவாக performance செய்து மிரட்டி எடுக்கிறார்.

ராஜா குடும்பத்து தலைவனாக ரியோ நியமிக்கப்பட்டுள்ளார்.  இதில் அரக்கன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எந்த தொந்தரவு கொடுத்தாலும் ராஜா குடும்பத்தினர் எந்த உணர்ச்சியும் வெளிக்காட்டாமல் இருக்கவேண்டும். இதில் சுரேஷின் நடிப்பு வேற லெவலில் உள்ளது. இரண்டாவது ப்ரோமோவிலே பாலாவுக்கு சுரேஷுக்கு சில சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆக இந்த டாஸ்கில் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்ல...