1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 7 நவம்பர் 2020 (15:14 IST)

கமலுக்கு பர்த்டே சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ் - ஒரு வழியா முதல் ப்ரோமோவ ஓட்டிட்டாங்க!

பிக்பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்களின் பஞ்சாயத்தை தீர்த்து வைக்க கமல் ஹாசன் நுழைந்துவிட்டார். இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடும் கமலுக்கு பிக்பாஸ் வீட்டில் கேக் வெட்டி செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

அத்துடன் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அப்போது கமலுக்கு முதல் ஆளாக வாழ்த்து கூறிய பிக்பாஸ் அவரிடம் ட்ரீட் கேட்டார். அதற்கு கமல், நான் எல்லோரையும் சமமாக,  மரியாதையுடன் நடத்துகிறேன். அதையே உங்களிடமும் எதிர்பார்க்கிறேன். அது தான் உங்களுக்கு ட்ரீட் என கூறி நச்சுன்னு பதில் அளித்தார்.

அப்படியே பிறந்தநாள் பரிசா பாலாஜிக்கு குறும்படம் போட்டு காட்டி எல்லோர் மனதையும் குளிர வையுங்க ஆண்டவரே என ஆடியன்ஸ் கோரிக்கை வைத்து கமலுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.