1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (12:26 IST)

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு....!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரீஸ் டாஸ்கில் சாண்டியை பார்க்க அவரது மனைவி மற்றும் மகள் லாலா வந்துள்ளனர்.  சாண்டிக்கு மகள் லாலா அலாதி பிரியம் என்று அவரது மனைவி பேட்டிகளில் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்பா - மகள் பாசத்தில் இருவரும் கொஞ்சம் ஓவர் தான் என கூறியிருந்தார். 


 
இந்நிலையில் தற்போது அவர்களின் பாசத்தை நம் கண்முன் காட்டும் வகையில் இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது. இதில்  " அழகிய மழலையின் புன்னகையுடன் பிக்பாஸ் வீட்டின் கதவு திறக்கிறது. சாண்டியின் குழந்தை லாலா குருநாத டீஷர்ட் அணிந்து கியூட்டாக நடந்து சென்று அப்பாவை கட்டியணைத்தாள். 
 
இந்த ப்ரீஸ் டாஸ்க் போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல் பார்வையாளர்களுக்கும் டச்சிங்காக இருக்கிறது. அதிலும், பாடல்களை தேர்வு செய்யும் அந்த நபருக்கு ரசிகர்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.