வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (13:10 IST)

வெளியேறுவாரா கவின்?? டிரெண்டான வனிதா: டிவிட்டரை கலக்கும் பிக்பாஸ்!!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரான வனிதா தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறார். 
 
பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களால் வெளியேற்றப்பட்ட வனிதாவை மீண்டும் வைல்ட் கார்டு போட்டியாளராக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறார். 
 
ஆம், நேற்றைய ஓபன் நாமினேஷனின் போது கவின், சாண்டி உள்பட அனைவரையும் வெளுத்து வாங்கிய வனிதாவை மக்கள் ஆதரித்தும், வெறுத்தும் வருகின்றனர். கவின் தனது நண்பர்களை வெற்றி பெறுவது எனக்கு மகிழ்ச்சி என கூறியதை தவறு என பேசி சண்டையிட்டு வருகிறார் வனிதா. 
ஆனால் இதே வனிதா சேரன் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி எனவும் பிக்பாஸ் வீட்டிற்குள் கூறியுள்ளார். எனவே, வனிதவை ஆதரித்தும், வெறுத்தும் மக்கள் தங்களது கருத்துக்களை டிவிட்டரில் பதிவிட்டு வருவதால் வனிதா டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறார். 
 
#Vanitha மட்டுமின்றி #OpenthedoorforKavin என்ற ஹேஷ்டேக்கும் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.