செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : வெள்ளி, 6 அக்டோபர் 2017 (23:26 IST)

பதக்கம் துருப்பிடித்துவிடும், 50 லட்சம் காணாமல் போய்விடும்: சாபம் விடுகிறாரா சினேகன்

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளராக இருந்த சினேகன் பிக்பாஸ் வீட்டில் இருந்த போதும், வீட்டை விட்டு வெளியே வந்த பின்னரும் பில்டப்பை தொடர்ந்து கொண்டே இருக்கின்றார். பிக்பாஸ் வீட்டில் நான் தான் நாட்டாமை என்று கூறாமல் கூறி வந்த சினேகன், தனக்கு எப்போதுமே தலைமை பண்பு பிடிக்கும் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவரை தலைவராக ஏற்று கொள்ள எவ்வளவு பேர்களுக்கு பிடிக்கும் என்பதை பற்றி அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை



 
 
மேலும் பிக்பாஸ் வின்னருக்கு கிடைத்த பதக்கம் துருப்பிடித்துவிடும், அவருக்கு கிடைத்த ரூ.50 லட்சம் சில நாட்களில் செலவாகிவிடும். ஆனால் எனக்கு கிடைத்துள்ள புகழ் என்றுமே நீங்காது என்றும் சினேகன் தனது பேட்டியில் கூறியுள்ளார்
 
பொதுமக்களிடம் இரக்கத்தை பெறுவதற்காக அழுதீர்களா? என்ற கேள்விக்கு உங்களிடம் இரக்கத்தை பெற்று நான் என்ன பண்ண போறேன், அது எனக்கு சோறு போடுமா? என்ற சினேகன், நான் ஒருவேளை சோற்றுக்காக உங்கள் வீட்டு படியேறி வரமாட்டேன்' என்று பதில் கூறியது அனைவருக்கும் வியப்பைத்தந்தது. மேலும் பேட்டி முழுவதிலுமே கிட்டத்தட்ட தன்னை பற்றியே பெருமையாக அவர் பேசி கொண்டது பேட்டியை பார்ப்பவர்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.