செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 13 அக்டோபர் 2021 (18:29 IST)

பிக்பாஸ் - சீசன் 5 ; முக்கிய நடிகை விலகல்

பிக்பாஸ் 5 வது சீசனில் முக்கிய நடிகை ஒருவர் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி பிக்பாஸ் 5 வது சீசன் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்  மாடல் அழகி நமீதா மாரிமுத்து  கலந்து கொண்டார்.  இவர் சினிமாவில் நடித்துள்ளதால் மக்களிடையே பிரபலம் ஆனார்.

கதை சொல்லும் டாஸ்கில் தனது உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பேசி தான் கடந்து வந்த பாதைகளை விளக்கினார். இந்நிலையில் தாமரைச் செல்விக்கும் நமீதாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில், தற்போது 17 போட்டியாளர்கள் அமர்திருந்தனர். ஆனால் நமிதா மாரிமுத்துவைக் காணவில்லை. ஒருவேளை அவர்கள் விலகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.