புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 14 டிசம்பர் 2018 (09:01 IST)

மீண்டும் ஹீரோயினாக நடிக்கிறார் பாவனா: அதுவும் எந்த படத்தில் தெரியுமா?

நடிகை பாவனா,  மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளார். 96 படத்தின் கன்னட ரீமேக்கில் த்ரிஷா வேடத்தில் அவர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 
தமிழில் சித்திரம் பேசுதடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பாவனா, தீபாவளி, கூடல் நகர், வெயில்  ஆர்யா, ஜெயம் கொண்டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கன்னடம், தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 
 
பாவனாவுக்கும் கன்னடத்தில் அவர் நடித்த முதல் படத்தை தயாரித்த நவீன் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்தனர். திருச்சூரில் உள்ள பாவனா வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. 
 
கடந்த ஜனவரி மாதம் பாவனாவுக்கும், நவீனுக்கும் திடீர் திருமணம் நடந்தது. நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்து எளிமையாக திருமணத்தை நடத்தினார்கள். அதன்பிறகு பாவனா சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். 
 
தமிழில் விஜய் சேதுபதி-திரிஷா நடித்து வெற்றி பெற்ற 96 படத்தின் கன்னட ரீமேக்கில் திரிஷா வேடத்தில் அவர் நடிக்கிறார். இதில் விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் கணேஷ் நடிக்கிறார். பிரீத்தம் குப்பி இயக்குகிறார்.