1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 3 மே 2023 (15:33 IST)

இளையராஜாவின் அண்ணன் மகன் பாவலர் சிவன் மறைவு

pavalar shiva
இளையராஜாவின் அண்ண பாவலர் வரதராஜனின் மகன் பாவலர் சிவன்960)  நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.

இந்தியாவில் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா. இவரது மூத்த சகோதர் பாவலர் வரதராஜன். இவர் அன்றைய காலத்தில் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முக ஆற்றலுடன் திகழ்ந்தவர் ஆவார்.

இவர் கடந்த 1973 ஆம் ஆண்டில் காலமானார். இவரது மகன்களில் ஒருவர் பாவலர் சிவன்(60). இளையராஜாவின் இசைக்குழுவில் இணைந்து சில படங்களுக்கு கிதார் கலைஞராகப் பணியாற்றியுள்ளார்.  சில படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

புதுச்சேரியில் வசித்து வந்த பாவலர் சிவன்  நேற்று உடல நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.